குருநகர் இளைஞன் கொலை வழக்கில் இதுவரை 8 பேர் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டமையுடன், முக்கிய சந்தேகநபர்கள் உட்பட 6 பேர் சரணடைந்தனர். இவர்களுக்கான அடையாள அணிவகுப்பு இன்று யாழ் நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றிருந்தது.
இதில், சாட்சிகள் உட்பட சந்தேகநபர்கள் சார்பில் சட்டத்தரணிகளான சிறிகாந்தா, றெமிடியஸ், அபிதன், நிசாந்தன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
இதன்போது, அடையாள அணிவகுப்பிற்கான நபர்கள் போதுமானதாக இல்லாத காரணத்தால் இன்றைய அடையாள அணிவகுப்பை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார்.
இதன்போது, சட்டத்தரணி சிறிகாந்தா சந்தேகநபர்களின் அணிவகுப்பை பகுதி பகுதியாக பிரித்து நடாத்துமாறு கோரியிருந்தார்.
எனினும், கோரிக்கையை நிராகரித்த நீதிவான், மற்றைய சந்தேகநபர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை. அதற்காக என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளீர்கள் என பொலிஸாரிடம் கடும் தொனியில் வினாவியிருந்தார்.
அதற்கு உரிய பதிலளிக்க பொலிஸார் தவறியமையால், இதற்கு பொறுப்பாக யாழ். குற்றத்தடுப்புபிரிவு பொறுப்பதிகாரி மன்றில் தோண்றி பதிலளிக்குமாறு யாழ் நீதவான் பீற்றர்போல் கடும் தொனியில் உத்தரவிட்டார். ஏனையோரை துரிதமாக கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.


