திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.தௌபீக் இன்று குச்சவெளி பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டு அரசியல் முன்னெடுப்புகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
அடுத்த வருடத்தில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தல் மற்றும் இப்பிரதேசத்தில் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குச்சவெளி பிரதேசத்தில் முஸ்லிம் மக்களின் காணிப் பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் கவனத்திற்கு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தெளிவுபடுத்தினர்.
இதுதொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் உயர்பீட உறுப்பினர் அன்ஸார் ஹாஜியார். குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.முபாரக், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.



