கடந்த காலங்களில் சரியான அதிகாரங்கள் கிடைக்காததாலேயே தமிழ் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்! அமைச்சர் டக்ளஸ்

கடந்த காலங்களில் சரியானவர்களின் கைகளில் அதிகாரங்கள் கிடைக்காமையினாலேயே தமிழ் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக கடற்கொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக் கழகத்தில் இடைநிறுத்தப்பட்ட கலாசார சுற்றுலா சிறப்புக் கற்கை நெறியை தொடருவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட மெய்நிகர் வழியூடான கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

இதன்போது, மக்களோடு வாழ்ந்து மக்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு அவற்றை தீர்த்து வைக்கக் கூடியவர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.

கடந்த காலங்களில் எமது தலைமைகளின் தவறான அணுகுமுறைகள் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்களை சுட்டிக்காட்டி, அந்த அனுபவங்களை படிப்பினையாகக் கொண்டு எதிர்காலத்தில் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை, தமிழ் மக்களின் தொல்லியல் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயற்பாடு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கையால் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக இதன்போது வரலாற்றுத் துறை பேராசிரியர் புஸ்பரத்தினம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply