தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்குப் பிறகு இக் கட்சியை வழிநடத்த பொருத்தமானவர் தான் மட்டுமே என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று வரை எதிர்க்கட்சியில் சிறந்த தேசியத் தலைவர் இல்லை என்று தெரிவித்ததோடு நாட்டுக்காக ஒரு புதிய தேசியத் தலைமையை கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு நல்லாட்சி அரசாங்கம் வடக்கு மக்களுக்கு உரிய தேவைகளை சரியாக நிறைவேற்றாததால் வடக்கு மக்கள் என்னையும் ஒரு எதிரியாக பார்க்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு தொலைக்காட்சி நேர்காணலின் போதே தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


