இன்று இதுவரையில் 720 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 160 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் ன சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னதாக இன்று 560 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அதன்படி இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 720 ஆக உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 526,383 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இவர்களில் 32ஆயிரத்து 920 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை,கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 468 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 480,097 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply