மீண்டும் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல்?- அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை

ஏப்ரல் 21, 2019 அன்று உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலைப் போன்ற பயங்கரவாத தாக்குதலை இலங்கை சந்திக்க நேரிடும் என்ற ஊடக அறிக்கைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை (ACJU) தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் இலங்கை மக்களை அனைத்து பேரிடர்களிலிருந்தும் பாதுகாக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் இந்த அமைப்பு அனைத்து முஸ்லிம்களையும் கடவுளின் பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் எந்தத் தாக்குதலும் உறுதி செய்யப்படவில்லையென்றும் அனைத்து முஸ்லிம் சமூகங்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அந்த குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply