இலங்கை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச(Gotabhaya Rajapaksha), இலங்கை கிரிக்கெட் அணி வீரர் திசர பெரேராவுடன்(Tissara Perera) கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் இராணுவத்தின் 72ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு அநுராதபுரம், சாலியபுர கஜபா ரெஜிமெண்ட் தலைமையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கோட்டாபய ராஜபக்ச கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தோடு அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தையும் திறந்து வைத்ததன் பின்னா் கோட்டாபய ராஜபக்ச, இலங்கை அணி வீரர் வீரர் திசர பெரேராவுடன் கிரிக்கெட் விளையாடியமை அனைவரதும் கவனத்தை ஈர்த்ததோடு சமூகவலைத்தளங்களில் இந்த புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றது.

மேலும் இந்த நிகழ்வில், முன்னாள் கிரிக்கெட் வீரரான அஜந்த மெண்டிஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.




