இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன.
அதன்படி, 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை ஆயிரத்து 257 ரூபாவினாலும், 5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 503 ரூபாவினாலும், 2.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 231 ரூபாவினாலும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது.
எனினும் , 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 2,750 ரூபாவாகவும், 5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 1,101 ரூபாவாகவும், 2.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 520 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


