திருட்டு வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட நபரொருவர் செய்த செயல்-மீண்டும் சிக்கியது எப்படி?

நீதிமன்றத்தால் திருட்டு வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட நபரொருவர் நேற்றுமுன்தினம் (08) மீண்டும் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இது குறித்து தெரியவருவதாவது, வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டுக்கோட்டை பகுதியில் திருட முனைந்த வேளை பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு குறித்த நபர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும் இந்நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட வட்டுக்கோட்டை பொலிஸார் குறித்த நபர் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் சுழிபுரம் பகுதியில் 6பவுண் நகையை ஏற்கனவே திருடியது மற்றும் வட்டு சித்தன்கேணி பகுதியில் திருடிய குற்றச்சாட்டில் தொடர்பாக நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என தெரியவந்தது.

அத்தோடு சந்தேக நபர் திருடிய நகைகளை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் விற்றதாக அந்த நபர் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து வட்டுக்கோட்டை பொலிசாரால் குறித்த நபர் நகையை விற்றதாக கூறப்படும் புதுக்குடியிருப்பு பகுதிக்கு நேற்றைய தினம் (09) அழைத்துச் சென்றதாக குறிப்பிடப்ட்டுள்ளது

ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஏனைய திருட்டு நடவடிக்கைகளிலும் அவருக்கு தொடர்பு இருக்குமா என்ற நோக்கில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply