பருத்தித்துறை கற்கோவளம் புனித நகர் பகுதியில் நேற்றிரவு ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பெரும் குழு மோதலில் ஜந்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
வன்முறையை கட்டுப்படுத்த முடியாத பருத்தித்துறை பொலிஸாருக்கு துணையாக மேலதிகமான நெல்லியடி பொலிசாரும் அழைக்கப்பட்டு வன்முறைகளை கட்டுக்குள் வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த இருதினங்களாக இரு பிரிவினருக்கு இடையே காணப்பட்ட முரண்பாடு நேற்று மாலை 4 மணியின் பின்னர் குழு மோதலாக மாறியது.
இதன்போது பல வீடுகள் சேதமடைந்தன.வீடுகளிருந்த பொருட்களும் அடித்து நொருக்கப்பட்டன.
அந்த ஊரைச்சேர்ந்தவர்களை விட வேறு பல பகுதிகளில் இருந்து அழைத்துவரப்பட்டவர்களே இதை நடத்தினர் எனவும் கூறப்படுகின்றது.
இதைத்தொடர்ந்து பருத்தித்துறை பொலிசார் வன்முறையை கட்டுப்படுத்த முயன்றனர்.ஆளணி குறைபாட்டால் நெல்லியடி பொலிசாரும் துணைக்கு அழைக்கப்பட்டனர்.இதைத் தொடர்ந்து நேற்றிரவு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதைத் தொடர்ந்து குறித்த பகுதிகளில் இருந்து எவரும் வெளியேற முடியாதவாறு கட்டுப்பாடுகளை பொலிஸார் அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


