20 முதல் 30 வயதிற்கு உட்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி

<!–

20 முதல் 30 வயதிற்கு உட்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி – Athavan News

நாட்டில் 20 முதல் 30 வயதிற்கு உட்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று (திங்கட்கிழமை) முதல் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கமைய, இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமைவரை அருகில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குச் சென்று மாணவர்கள் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதேநேரம், நாட்பட்ட நோய்கள் மற்றும் விசேட தேவையுடையோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளும் இன்று முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply