
Laugfs சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளும் இன்று (11) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.
12.5kg: ரூ. 1,856 இலிருந்து ரூ. 2,840 ஆக ரூ. 984 இனால் அதிகரிப்பு
5kg: ரூ. 743 இலிருந்து ரூ. 1,136 ஆக ரூ. 393 இனால் அதிகரிப்பு
நேற்று நள்ளிரவு முதல் லிட்ரோ (Litro) நிறுவனம் தமது நிறுவன சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை இன்று (11) முதல் அதிகரிப்பதாக தெரிவித்திருந்த நிலையில், Laugfs நிறுவனமும் விலை அதிகரிப்பை அறிவித்துள்ளது.
கடந்த ஓகஸ்ட் 12ஆம் திகதியும், Laughfs கேஸ் நிறுவனம் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை அதிரித்திருந்தது. ஆயினும், பழைய விலைக்கே தமது சிலிண்டர்களை விற்கவுள்ளதாக Litro நிறுவனம் அப்போது அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில், பால் மா, கோதுமை மா, சீமெந்து, சமையல் எரிவாயு ஆகியவற்றின் கட்டுப்பாட்டு விலைகளை நீக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டதை தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பால் மா விலைகளை அதிகரிப்பதாக பால் மா இறக்குமதியாளர்களின் சங்கம் அறிவித்திருந்தது.அதிகரிக்கப்பட்ட லிட்ரோ சமையல் இது வாயு சிலிண்டர்களின் புதிய விலைகள் வருமாறு
12.5kg: ரூ. 1,257 இனால் அதிகரிப்பு – புதிய விலை ரூ. 2,750
5kg: ரூ. 503 இனால் அதிகரிப்பு – புதிய விலை ரூ. 1,101
2.5 Kg: ரூ. 231 இனால் அதிகரிப்பு – புதிய விலை ரூ. 520
அண்மையில், பால் மா, கோதுமை மா, சீமெந்து, சமையல் எரிவாயு ஆகியவற்றின் கட்டுப்பாட்டு விலைகளை நீக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டதை தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


