மட்டக்களப்பில் நான்கு கைக்குண்டுகள் மீட்பு!

மட்டக்களப்பு, பெரியகாலபோட்டமடு பகுதியில் நான்கு கைக்குண்டுகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

வவுணதீவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, தாண்டியடி விசேட அதிரடிப்படையினரும் இணைந்து குறித்த கைக்குண்டுகளை மீட்டுள்ளனர்.

பெரியகாலபோட்டமடு பிள்ளையார் ஆலயத்துக்கு பின்புறம் உள்ள வயற்காணியில் விதைப்பிற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை மேற்கொள்ளும்போது, கைக்குண்டுகளை கண்ட காணி உரிமையாளர், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

மேலும், இந்தக் கைக்குண்டுகள் கடந்த யுத்த காலப்பகுதியில் கைவிடப்பட்டவையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகப்படுகின்றனர்.

இதுதொடர்பில், மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply