சீமெந்து, கோதுமை மா என்பவற்றுக்கான புதிய விலை அறிவிப்பு!

சீமெந்து மற்றும் கோதுமை மா என்பவற்றுக்கான புதிய விலைகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை இன்று அதிகாலை முதல் 10 ரூபாவால் அதிகரித்துள்ளதாக கோதுமை மா இறக்குமதி நிறுவனமான செரன்டிப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலை 200 ரூபாயால் அதிகரிக்க வேண்டும் என சீமெந்து விநியோகஸ்தர்கள் கோரியிருந்தனர்.

எனினும், 100 ரூபாயால் மாத்திரம் அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்திருந்தார்.

இதற்கமைய, 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலையை 97 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply