20 ஆவது திருத்தத்தின் தோல்வியை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ள வேண்டும்! – ரணில்

அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் தோல்வியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், 19 ஆவது திருத்தத்தின் கீழ் பாரம்பரிய அமைச்சரவை ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு சில நாட்களுக்கு முன்பு ஜனாதிபதி தனக்கு குறைந்த அரசியல் அனுபவம் இருப்பதாகவும் அமைச்சரவை அமைச்சர்கள் எல்லாரும் ஒன்று கூடி ஆட்சியை கொண்டு செல்வோம் என்று கூறியிருந்தார்.

இது சிறந்த அறிவிப்பு தான். இதனடிப்படையில், பார்க்கும் போது 20 ஆவது திருத்தச் சட்டம் தோல்வியடைந்துள்ளது என்று ஜனாதிபதி ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், 20 ஆவது திருத்தத்தின் காரணமாக நாங்கள் அமைச்சரவை அரசமைப்பை இழந்துள்ளோம் என்றும், இதற்கு செய்ய வேண்டியது 20 ஆவது திருத்தத்தை இரத்து செய்து 19 ஆவது திருத்தத்தின் கீழ் அரசாங்கத்தைக் கொண்டு செல்வது ஆகும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply