சம்பளம் போதாது என்றால் ஆசிரியர்கள் வேறு தொழில்களை தேடிக்கொள்ளுங்கள்! – வசந்த ஹதபான்கொட

சம்பளம் குறைவாக இருப்பதாகக் கூறும் ஆசிரியர்களுக்கு வேறு தொழில்களை தேடிக் கொள்வதற்கு சுதந்திரம் உள்ளது என்றும், 50,000 பட்டதாரிகள் இன்னும் ஆசிரியர் தொழிலில் சேர போராடி வருவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இலங்கை பொது கல்வி சேவைகள் சங்கத்தின் தலைவர் வசந்த ஹதபான்கொட தெரிவித்துள்ளார்.

நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், ஆசிரியர் தொழிற்சங்கங்களால் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுத்தாலும் 21 ஆம் திகதி பாடாலைகள் ஆரம்பிக்கப்படும்.

எங்களுடன் பல ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் சங்கங்கள் இணைந்திருக்கின்றன. அவர்கள் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க தயாராக உள்ளனர்.

இதுதொடர்பில், சில தீவிரவாத ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு அழுத்தங்களையும், அச்சுறுத்தல்களையும் பிரயோகித்து வருகின்றன.

தற்போது, ஆசிரியர் துறைக்கு வருவதற்கு போதுமான பட்டதாரிகள் உள்ளனர். அதில் 18,000 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சம்பளம் குறைவாக இருந்தால் ஏன் ஆசிரியர் தொழிலுக்கு இவ்வளவு பேர் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply