அனுபவமற்ற தலைவர் ஆட்சிக்கு வந்தமையின் மூலம் இன்று முழு நாடும் சீரழிந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
அஹுன்கல்ல கடவர கந்த பகுதியில் விவசாயிகளின் மூலமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், இலங்கையில் தற்போதைய அரசாங்கம், எந்த அரசாங்கமும் இல்லாத அளவு முட்டாள்தனமான முடிவுகளை எடுத்து இலங்கை வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.
இரசாயன உரங்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டதால், நெல் விவசாயிகள் மட்டுமின்றி கறுவா மற்றும் தேயிலை விவசாயிகளும் உதவியற்றவர்களாக மாறியுள்ளனர்.
பயிர்களுக்கு தேவையான இரசாயன உரங்கயைக் கோரி, இன்று நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஒரு வருடமாக உரம் போட முடியாததால் நாட்டிற்கு வருமானம் தந்த கறுவா பயிர்ச்செய்கை அழிக்கப்பட்டுள்ளது.
ஒரு அனுபவமற்ற தலைவர் ஆட்சிக்கு வந்ததால் நாடு பேரழிவிற்கு உள்ளாகியுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.


