திருகோணமலையில் நஞ்சருந்திய நிலையில் மூவர் மீட்பு!

திருகோணமலை, ராஜவரோதயம் வீதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த இரண்டு பெண்கள் உட்பட சிறுவர் ஒருவரும் நஞ்சருந்திய நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

ஏறாவூர், ஆறுமுகத்தான் குடியிருப்பு பகுதியிலிருந்து 29, மற்றும் 19 வயதுடைய இரு பெண்கள் மற்றும் இரண்டரை வயதுடைய மூவரும் திருகோணமலையிலுள்ள தனியார் விடுதியில் நேற்று தங்கியிருந்துள்ளனர்.

இருவரும் நேற்று காலை 11 மணி வரை கதவை திறக்காதமையின் காரணமாக விடுதி உரிமையாளர் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்தல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து, குறித்த இடத்திற்கு வந்த பொலிஸாரால் நஞ்சருந்திய மூவரும் மீட்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையுடன் இரண்டு பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த நபர்கள் மதுவுடன் நஞ்சை சேர்த்து அருந்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவரிகிறது.

இதுதொடர்பில், தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply