திருகோணமலையில் திருட்டில் ஈடுபட்ட நால்வர் கைது!

திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மத்திய வீதியில் உள்ள மகா சேல் கடையில் பணிபுரியும் இருவருடன் மற்றொரு நபரும் இணைந்து பல லட்சம் பெருமதியான பொருட்களை திருடிய மூவரை கைது செய்துள்ளதாக தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், திருடப்பட்ட பொருட்களைக் கொண்டு சென்ற முச்சக்கரவண்டி சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர்களிடமிருந்து, ஒன்றறை இலட்சம் பெறுமதியான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்ந்தும், பல மாதங்களாக குறித்த கடையில் திருட்டு நடைபெற்று வந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்;துள்ளது.

அப் பொருட்களை கொடுத்து போதைபொருட்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும், கைதுசெய்யப்பட்டவர்கள் 20 மற்றும் 21 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply