எரிபொருட்களின் விலையையும் அதிகரிக்கத் தீர்மானம்!

இலங்கையில் சமையல் எரிவாயு, பால்மா, சீமெந்து உள்ளிட்ட பொருட்களின் விலையேற்றத்தைத் தொடர்ந்து, வெகு விரைவில் எரிபொருட்களின் விலையையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பெரும் நட்டத்தை சந்தித்து வருவதால் எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டும் என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளதாகவும், இந்த இழப்பை ஈடுசெய்ய எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும்.

இதுதொடர்பில், எரிசக்தி அமைச்சரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply