சிலாபம், உடப்பு பகுதியில் இரு நபர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலைத் தீர்க்க சென்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மீது கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
கோழிப்பண்ணைக்குள் நுழைந்த ஒரு நபருக்கும் அதன் உரிமையாளர்களுக்கும் இடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இதனை தடுக்கச் சென்ற இரு பொலிஸ் அதிகாரிகள் மீது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த பொலிஸார் சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையோடு, சம்பவத்துடன் தொடர்புடையவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


