விவசாயிகளுக்கு இரசாயன உரங்களை பெற்றுக் கொடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!

நெல் பயிர்ச்செய்கை, காய்கறி பயிர்ச்செய்கை மற்றும் ஏற்றுமதி பயிர்களுக்கு தேவையான இரசாயன உரங்களை பெற்றுக் கொடுக்குமாறு ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

சுமார் 40 பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

நெல் விவசாயிகள் உர பற்றாக்குறையால் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும் இந்த கடிதத்தில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, இந்த கோரிக்கையை உணர்வுபூர்வமாக மறுபரிசீலனை செய்து விவசாயிகளின் உரப்பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்குமாறும் அவர்கள் அக் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply