
பதியத்தலாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேரங்கட பிரதேசத்தில், டிரக்டர் வண்டியை செலுத்தி சென்ற ஒருவர், திடீரென வண்டியிலிருந்து மயங்கிவிழுந்து, வண்டியின் சில்லில் நசுங்குண்டு பரிதாபகரமாக உயிரிழந்தார்.
பதியத்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக வண்டியிலிருந்து மயங்கி விழுந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் காயமடைந்தவரை மஓயா வைத்தியசாலையில் அனுமதித்தப்போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

