
யாழ் காரைநகர் கடற்பரப்பினுள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஆறு இந்திய மீனவர்கள் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரைநகர் கடற்படையினரின் விசேட ரோந்து நடவடிக்கையிக்ன்போது குறித்த மீனவர்கள் அறுவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள், அவர்கள் பயணித்த இழுவைப்படகுடன் மேலதிக விசாரணைகளுக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்படவுள்ளனர்.
பிறசெய்திகள்





