அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளத்தினை வழங்ககூட அரசாங்கம் திண்டாடுகின்றது- கு.திலீபன்

<!–

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளத்தினை வழங்ககூட அரசாங்கம் திண்டாடுகின்றது- கு.திலீபன் – Athavan News

கொரோனா அச்சுறுத்தலினால் ஏற்பட்ட வீழ்ச்சியினால், அரசாங்க ஊழியர்களுக்கு கூட சம்பளத்தினை வழங்கமுடியாது அரசாங்கம் திண்டாடுகின்றது என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியா- ஆச்சிபுரம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் கு.திலீபன் மேலும் கூறியுள்ளதாவது, “புதிய திட்டங்களை வர இருக்கின்ற வரவு செலவுத்திட்டத்தில் பார்த்து அறிந்துகொள்ளலாம். அதில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட கிராமங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இன்று வாழ்க்கை செலவீனம் அதிகரித்துள்ளது.  நாட்டில் ஏற்பட்ட கொரோனா வீழ்ச்சியால் இன்று அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளத்தினை கொடுப்பதற்கு கூட அரசாங்கம் திண்டாடுகின்றது.

ஆகையினால் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றமும் இடம்பெற்றுள்ளது. இது நிரந்தரமானதல்ல தற்காலிகமானது.

அத்துடன் சேதன பசளை திட்டத்தினை எமது அரசாங்கம் முன்னெடுத்தது. ஆனால் எதிர்க்கட்சிகளும் இங்குள்ள விதண்டாவாதிகளும் சேதன பசளை நாட்டிற்கு ஒவ்வாது விவசாயிகள் பதிக்கப்படுகின்றனர் என்கின்றனர்.

உயிருடன் விளையாடக்கூடிய விளையாட்டுத்தான் இரசாயன உரம். வவுனியா நொச்சுமோட்டை கிராமத்திற்கு அருகில் உள்ள கிராமத்தில் 4 அடி நிலத்தினை தோண்டினால் வெள்ளை கழியாக உள்ளது. அதற்கு கரணம் அங்கு போடப்பட்ட யூரியா உரம். அது எவ்வாளவு பாதிப்பானது.

ஆகவே எந்த திட்டத்தினை முன்னெடுத்தாலும் அது கடினமாகத்தான இருக்கும் பின்னர் அது சரியாக வரும் அதனை நம்பலாம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply