எரிவாயுவின் விலை மீண்டும் குறைப்பு!

அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையை நீக்கியதைத் தொடர்ந்து, நேற்று நள்ளிரவில் உயர்த்தப்பட்ட லிட்ரோ நிறுவனத்தின் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 12.5 கிலோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 75 ரூபாய் குறைக்கப்பட்டு தற்போது 2,675 ரூபாயாக உள்ளது.

5 கிலோ லிட்ரோ காஸ் சிலிண்டரின் விலை 30 ரூபாய் குறைக்கப்பட்டு புதிய விலை 1,071 ரூபாயாக உள்ளது

மேலும், 2.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 14 ரூபாய் குறைக்கப்பட்டு 506 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply