ரையிஸ், கொத்து மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகளை 10 ரூபாவால் அதிகரிப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதனிடையே, இன்று நள்ளிரவு முதல் பாணின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 450 கிராம் பாணின் விலையை 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமை மா மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலைகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பின் காரணமாகவே இந்த விலை அதிகரிப்புக்கள் ஏற்படுகின்றன.


