ஓன்பது தொழிலாளர்கள் குளவி தாக்குதலுக்கு இலக்கு!

குளவிக் கொட்டுக்கு தாக்குதலுக்கு இலக்காகி 9 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

பதுளை, நமுனுகுல – இந்துகலை மேற்பிரிவில் இன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒப்பந்த அடிப்படையில் தொழிலுக்குச் சென்ற 9 தொழிலாளர்களே இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இலக்காகியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின் 4 பேர் பதுளை வைத்தியசாலையிலும், 3 பேர் தெமோதரை வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதில், 3 பெண்களும், 4 ஆண்களுமே இவ்வாறு தாக்குலுக்கு இலக்காகி சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply