கொழும்பு, வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய நவராத்திரி விழாவில் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டுள்ளார்.
இவ்விழா நேற்று இடம்பெற்றுள்ளது.
மேலும், சிறப்பு பூஜை வழிபாடுகளிலும் அவர் கலந்து கொண்டார்.
இதன்போது, ஆலய அறநெறிப் பாடசாலை மாணவர்களின் வினோத உடைப்போட்டி மற்றும் இசை நிகழ்ச்சி போன்றவை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.




