மக்களைக் காப்பாற்ற அரசுக்கு திறன் இல்லை என்றால் நாட்டை என்னிடம் ஒப்படையுங்கள்!- சஜித்

அத்தியாவசியப் பொருட்களான எரிவாயு, சீமெந்து, கோதுமை மா மற்றும் பால் மா போன்றவற்றின் விலையை கட்டுப்படுத்த முடியாத அரசாங்கம் மக்களுக்கு தேவையில்லை என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், இந்த அரசுக்கு நாட்டை கட்டியெழுப்பும் திறன் இல்லை என்பதையும், குறைந்தபட்சம் பொருளாதாரத்தை நிர்வகிக்க முடியாது என்பதையும் ஆளுங் கட்சி அரசாங்கம் நன்றாக நிரூபித்துள்ளது.

தற்போது மக்கள் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சினைகளிலிருந்து அவர்களைக் காப்பாற்ற அரசுக்கு திறன் இல்லையென்றால் தனது தவறை ஏற்றுக்கொண்டு உடனடியாக ஆட்சியில் இருந்து வெளியேறி நாட்டை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும்.

மக்களுக்கான அனைத்து வருமான ஆதாரங்களும் தடுக்கப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்

Leave a Reply