வீட்டின் மீது மண் திட்டு சரிந்து விழுந்து விபத்து!

கடந்த மூன்று தினங்களாக பெய்த கனமழை காரணமாக மஸ்கௌலியா எட்டாம் வீதியிலுள்ள, வைத்தியசாலைக்கு செல்லும் குறுக்குப் பாதையில் அமைந்துள்ள வீட்டுப் பகுதியில் உள்ள மண் திட்டு சரிந்து வீட்டின் சுவர் மீது நேற்று நள்ளிரவு விழுந்துள்ளது.

இதில் எதுவித பாதிப்பும் இடம்பெறவில்லை. எனினும், தொடர் மழை காரணமாக மண் திட்டு சரிந்து விழுமாயின், இந்த வீட்டின் சுவர்கள் சரிந்து விழு வாய்ப்புள்ளதாக இந்த வீட்டில் குடியிருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இரவு நேரங்களில் மண் திட்டு சரிந்தால் உயிராபத்து ஏற்படலாம் எனவும் அவர்கள் பீதியில் உள்ளனர்.

ஆகவே, அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் இதனை வந்து பார்வையிட்டு, தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என அக் குடும்பத்தினர் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply