திருகோணமலை, பதவிசிறீபுர பிரதேச செயலகப் பிரிவின் காவன்திஸ்ஸபுர, ஹெலம்பவௌ ஆகிய இரு பிரதேசங்களை இணைக்கும் வகையில் மோர ஓயாவினூடாக பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமாகிய கபில நுவன் அத்துகோராள தலைமையில் நடைபெற்றது.
நீண்டகாலமாக இப்பாலம் இன்மை காரணமாக மக்கள் தங்களுடைய ஜீவனோபாய மற்றும் போக்குவரத்து தேவைகளை நிறைவேற்றுவதில் பாரிய சிரமங்களுக்கு முகங்கொடுத்து வந்துள்ளனர்.
இச் செயற்றிட்டத்திற்காக, 43 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், தற்போதைய அரசாங்கம் கொரோனாவுக்கு மத்தியிலும் இப்பாலத்தை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் பிரதேசவாசிகள் அரசாங்கத்திற்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்டுள்ளனர்.
இந்நிகழ்வில், மாவட்ட அரச அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள, பிரதேச அரசியல் தலைமைகள் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.



