உலகளாவிய ரீதியில் முதல் நான்கு நாடுகளில் ஒன்றாக சாதனை படைத்தது இலங்கை..!

உலகின் முதல் நான்கு நாடுகளில் தடுப்பூசி ஏற்றுவதில் இலங்கை ஒன்றாகும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

எனினும் இதற்கிடையில், 20 – 30 வயதிற்குட்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கண்டியில் நடைபெற்ற விழாவில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனை குறிப்பிட்டார்.

இதேவேளை, நாட்டில் கொரானா தொற்றால் உயிரிழந்தவர்களில் சுமார் 74 சதவீதம் பேர் எந்த தடுப்பூசியும் பெறாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

அத்தோடு , கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் அளவுகள் 46,639 டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply