மைத்திரிபால சிறிசேன இலங்கை அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டே அரசாங்கத்துக்கெதிரான சதித்திட்டங்களை மேற்கொண்டுவருகின்றார்.
பொலன்னறுவைக்கு செல்ல முடியாத நிலைமை அவருக்கு இருக்குமாக இருந்தால் அதனை அரசாங்கத்துக்குள் தெரிவித்து தீர்த்துக்கொள்ளலாம்.
மேலும் அவ்வாறு இல்லாமல் ஊடகங்களுக்கு தெரிவிப்பது சதித்திட்டமாகவே காண்கின்றேன் என தெரிவித்தார்.
அதனால் அரசாங்கம் தொடர்பில் நல்ல அபிப்பிராயம் இல்லாதவர்களுக்கு அரசாங்கத்தில் இருந்து வெளியேற முடியும் என உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் ராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.
மேலும் மாகாண நிறுவனங்கள் தொடர்பான இலங்கை நிறுவனத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


