நாளை உத்தியோக விஜயத்தை மேற்கொள்ளவுள்ள இந்திய இராணுவத்தளபதி..!

இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் அழைப்பிற்கமைய இந்திய இராணுவ பதவி நிலைப் பிரதானி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே நாளை{12} செவ்வாய்கிழமை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.

மேலும் இந்த உத்தியோகபூர்வ விஜயம் ஜந்து நாட்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இந்திய இராணுவத்தளபதி தனது விஜயத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்பு செயலாளர் ஆகியோருடன் சந்திப்புக்களை முன்னெடுக்கவுள்ளார்.

அத்தோடு நாளைமறுதினம் புதன்கிழமை இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவின் பங்கேற்புடன் பத்தரமுல்லையிலுள்ள இராணுவ தலைமையகத்தில் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பிலும் அவர் பங்குபற்றவுள்ளார்.

மேலும் இந்திய படையினரின் பங்கேற்புடன் இடம்பெற்று வருகின்ற ‘மித்ர சக்தி’ இராணுவ கூட்டு பயிற்சிகளின் இறுதிகட்ட நிகழ்வுகளையும் அவர் பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply