இந்திய இராணுவத்தினரால் யாழ்ப்பாணம்- கொக்குவிலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு தினம் பிரம்படி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (12) அனுஷ்டிக்கப்பட்டது.

மேலும் படுகொலை செய்யப்பட்டவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று காலை நினைவுத் தூபியில் நினைவு கூரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் 1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 12 ஆம் திகதியில் இந்திய இராணுவத்தினரால் 55 பேர படுகலை செய்யப்பட்டவர்களை நினைவு கூரிய நிகழ்வே இது.

குறித்த நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவித்து ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.அத்தோடு இந்த அஞ்சலி நிகழ்வில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


