மாகாணங்களிற்குஇடையிலான போக்குவரத்து சேவை 21ம் திகதி ஆரம்பமாகின்றது..!

மாகாணங்களிற்கு இடையிலான பேருந்து சேவை 21 ம் திகதி ஆரம்பமாகும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

சுகாதார துறையினர் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளனர் என கண்டியில் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும் புகையிரதசேவையை ஆரம்;பிப்பதை ஒத்திவைக்குமாறு சுகாதார துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரசதனியார் பேருந்து சேவைகளை பயன்படுத்தி மாகாணங்களிற்குள் பேருந்துகளில் சனநெருக்கடியை கட்டுப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அனுமதியின்றி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை பயன்படுத்த முடியாது- போதிய போக்குவரத்து வசதியின்றி மக்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடி குறித்து நாங்கள் அறிந்துள்ளோம் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply