சம்பள முரண்பாடு: ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

<!–

சம்பள முரண்பாடு: ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு! – Athavan News

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.

இதற்கமைய அலரிமாளிகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 12 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

ஆசிரியர் – அதிபர்களின் சம்பள முரண்பாடு குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபக்குழுவின் உறுப்பினர்களும் இன்றைய சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.


Leave a Reply