கார் விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி!

திருகோணமலை – கண்டி வீதியில் கந்தளாய் பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் ஒருவர் ஸ்தலத்திலே பலியானதுடன் இன்னும் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த காரில் பயணித்த 50 வயதான பொலிஸ் உத்தியோகத்தரே பலியானதாகவும் 55 வயதான கார் சாரதி படுகாயங்களுக்கு உள்ளாகி கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இவ்விபத்துச் சம்பவத்தில் மாத்தளை பகுதியைச் சேர்ந்த டி.எல் சிறிசேன என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், திருகோணமலையிலிருந்து கந்தளாய் நோக்கி சென்று கொண்டிருந்த கார் கந்தளாய் பிரதான புகையிரதக் கடவையில் உள்ள கம்பத்தில் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர் .

Leave a Reply