மார்ச் மாதத்துக்கு முன் மாகாண சபைத் தேர்தல்! – பீரிஸ்

அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீPலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், மாகாண சபைத் தேர்தல் முறையில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

இதன்மூலம் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு பொருத்தமான சூழல் உருவாக்கப்படும். ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எதிர்க்கட்சிகள் குறிப்பிடுவதைப் போன்று வெளிநாட்டு சக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து செயற்பட போவதில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply