பிரதமருக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் மீண்டும் இன்று சந்திப்பு!

ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் இன்றும் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

இச் சந்திப்பு அலரிமாளிகையில் இன்று மதியம் 12 மணியளவில் இடம்பெறவுள்ளது.

ஆசிரியர், அதிபர்களின் சம்பள முரண்பாடு குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபக்குழுவின் உறுப்பினர்களும் இன்றைய சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.

தாம் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின் போராட்டம் தொடரும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லையென்றும், 21 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு கிடைத்தால் ஆசிரியர்களும் அதிபர்களும் பாடசாலைகளுக்கு சமூகமளிப்பார்கள் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply