படுகொலையில் முடிந்த மோதல்- திடுக்கிடும் சம்பவம்!

மாத்தளை – கலேவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பவட்டன 01ஆம் இலக்க பிரதேசத்தில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் காரணமாகவே, ஒருவர் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என கலேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் கலேவெல பிரதேசத்தை சேர்ந்த 22 வயது நபரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் தப்பி சென்றுள்ளதாகவும், அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply