வர்த்தக நிலையமொன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து

பொலன்னறுவை – அரலங்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அலவாக்கும்புர பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையமொன்றில், தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை (11) மாலை ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, குறித்த வியாபாரம் பாரியளவு சேதமடைந்துள்ளதாக, அரலங்கவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், தீ விபத்து ஏற்பட்ட வர்த்தக நிலையத்திற்கு விரைந்த பொலிஸாரும் பொலன்னறுவை நகரசபையின் தீயணைப்புப் பிரிவினரும் இணைந்து, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

அத்துடன், தீ விபத்தில் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என்றும் வர்த்தக நிலையத்திலிருந்த பொருட்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, தீ விபத்தில் ஏற்பட்ட சேத விபரம் இதுவரை மதிப்பிடப்படவில்லை என்பதுடன் தீ விபத்துக்கான காரணமும் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply