ஏழாலையில் வீட்டில் வைத்து போதை மாத்திரை விற்பனை செய்த ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏழாலையைச் சேர்ந்த 38 வயது நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
6 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பெறுமதியுடைய போதை மாத்திரைகளை, 9 ஆயிரத்து 60 மாத்திரைகள் சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்ற தடுப்பு பிரிவினர் இந்த கைது நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்.
சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.


