அனுராதபுரம், கல்கிரியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹஹேட்டியாவ பிரதேசத்தில், ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பரிதாபகரமாக உயிரிழந்தார்.
இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹஹெட்டியாவ, பயாகல பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
கல்கிரியாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.


