சுசந்திக்கா ஜயசிங்கவுக்கு வழங்கப்படவுள்ள புதிய பதவி

முன்னாள் தடகள வீராங்கனை தேசபந்து சுசந்திக்கா ஜயசிங்கவுக்கு புதிய பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை அமைச்சரவை ஊடக பேச்சாளா் அமைச்சர் டலஸ் அழகப்பெரும இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இந்த விடயத்தை, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்று வரும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளா் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே குறிப்பிட்டாா்.

அதன்படி, சுசந்திக்கா ஜயசிங்கவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சில் சிரேஷ்ட ஆலோசகா் பதவி வழங்க அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply