இந்திய இராணுவ பிரதானி இலங்கையை வந்தடைந்தார்!

இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே இலங்கையை இன்று வந்தடைந்தார்.

இந்திய இராணுவ தளபதியின் விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் வேண்டுகோளை ஏற்று இந்திய இராணுவ தளபதி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply