சீன நிறுவனத்திடம் இருந்து உரங்களை இறக்குமதி செய்வதற்கான தடை இராஜதந்திர பிரச்சினை அல்ல என அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
சீன நிறுவனத்திடமிருந்து கரிம உரங்களை இறக்குமதி செய்வதை தடை செய்யும் முடிவை எதிர்த்து மேன்முறையீடு செய்ய முடியும். எந்த நிறுவனமும் மேன்முறையீடு செய்யலாம் என்றும் அதுதான் ஜனநாயகம்.
எவ்வாறாயினும், இந்த விடயம் இலங்கையர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உள்ளடக்கியது. இதனை இராஜதந்திர பிரச்சினையாக பார்க்கக்கூடாது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உரங்களில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் கண்டுபிடிக்கப்பட்டமையால், சீன நிறுவனத்திடமிருந்து கரிம உரத்தை இறக்குமதி செய்ய முடிவு எடுக்கப்படவில்லை என்று விவசாய அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது.
இதனையடுத்து, சீன நிறுவனத்திடமிருந்து கரிம உரங்களை இறக்குமதி செய்வது தொடர்பாக அறிவியல் மற்றும் உண்மைகளை மதிக்குமாறு சீனா சமீபத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் தொடர்பில் பிரதமர் தலைமையில் இன்று இடம்பெறும் பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வு எட்டப்படும்.
அதையடுத்து, மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பதில் எந்தவித தடையும் இருக்காது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


