திருகோணமலையில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

திருகோணமலை, அனுராதபுர சந்தி, காந்தி நகரில் போதைப் பொருட்களுடன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுர சந்தி, காந்தி நகர் பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த நபரிடமிருந்து, 600 போதை மாத்திரைகளும், 4,250 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த நபர் தொடர்பாக நீண்ட நாட்களாக கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவல்களையடுத்து, இன்று மேற்கொண்ட நடவடிக்கையின்போது, இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பில், மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply