உலக சாதனைக்காக பயங்கர முயற்சியில் இலங்கை இளைஞன்

மாத்தளையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர், ஆறு அடி ஆழமுள்ள குழிக்குள் மேல் தீயினை மூட்டி, அதனுள் 6 மணி நேரம் தூங்கி எழுந்து உலக சாதனை படைக்கத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை – கொங்கவில பகுதியில் வசிக்கும் 36 வயதுடைய மொஹமட் முசாதிக் என்ற நபர் ஒருவரே இந்த பயங்கரமான உலக சாதனை படைக்க முயன்றுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இவ்வாறான சாதனையை இதுவரை உலகில் யாரும் செய்யவில்லை.

தனது சொந்த நாட்டிற்கு முழு உலக கவனத்தையும் ஈர்க்கவே இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த சாதனையை மேற்கொள்ள நண்பர்களுடன் பலமுறை பயிற்சிகளை செய்துள்ளார்.

சிறு வயதிலிருந்தே தனது குறிக்கோள் இலங்கை மீது முழு உலகத்தின் கவனத்தை ஈர்ப்பதுடன், இலங்கை மக்கள் எதற்கும் துணிந்தவர்கள் என்பதை உலகுக்குக் காண்பிப்பதே தனது நோக்கம் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், சில நாட்களுக்கு முன்பு மாத்தளை பகுதியில் தனது நண்பர்களின் உதவியுடன் ஆறு அடி அளவில் குழியை தோண்டி, மண்ணினால் மூடி அதற்கு மேல் மரக்கட்டைகளை போட்டு, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தீ வைத்து தான் முயற்சி செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply